< Back
பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்...!

Image Courtesy: @airnewsalerts

பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்...!

தினத்தந்தி
|
2 Jun 2023 4:09 PM IST

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் கிரண் ஜார்ஜ் காலிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தார்.

பாங்காங்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் எதிர்பார்க்கப்பட்ட இந்திய முன்னணி நட்சத்திரங்கள் ஏமாற்றிய நிலையில் வளரும் வீரர்கள் முன்னேறுகிறார்கள்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் மலேசியாவின் லியுங் ஜூன் ஹோவை எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் 21-19, 21-11 என்ற செட் கணக்கில் லியுங் ஜூன் ஹோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் .

மற்றோரு இந்திய வீரரான கிரண் ஜார்ஜ் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸின் டிஜே போபோவ்க்கு எதிரான ஆட்டத்தில் 21-16, 21-17 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.

மேலும் செய்திகள்