< Back
பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன்
பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன்

தினத்தந்தி
|
19 May 2024 11:07 AM GMT

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் -சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணை, சீனாவின் சென் போ யாங் - லியு யி ஜோடியை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய இணை 21-15 மற்றும் 21-15 என்ற நேர் செட் கணக்கில் சீன ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

மேலும் செய்திகள்