< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சாத்விக்- சிராக் ஜோடி
|18 May 2024 6:59 PM IST
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஷெட்டி ஜோடி தைவான் ஜோடியை எதிர்கொண்டது.
பாங்காக்,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஷெட்டி ஜோடி தைவான் ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சாத்விக்- சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை எதிர்கொள்கிறது.