< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதியில் அஷ்மிதா சாலிஹா தோல்வி
|4 Feb 2024 9:13 AM IST
மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேட்தாங்கை எதிர்கொண்டார்.
பாங்காக்,
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேட்தாங்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் அஷ்மிதா சாலிஹா 13-21, 12-21 என்ற செட் கணக்கில் சுபநிடா கேட்தாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.