< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: யமகுச்சியை வீழ்த்தி பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்..!
|20 May 2022 4:51 PM IST
இன்று நடைபெற்ற கால்இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதினார்.
பாங்காக்,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற, கால்இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்த்து மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் யமகுச்சியை வீழ்த்தி வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.