தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி
|சீன தைபேயின் லின் சுன் யிடம் தோற்று நடையை கட்டினார்.
பாங்காக்,
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 9-21, 21-13, 17-21 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் மிதுன் மஞ்சுநாத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 9-21, 11-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன் யிடம் தோற்று நடையை கட்டினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-12, 15-21, 21-17 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் பாய் யு போவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். அதே சமயம் மாள்விகா பன்சோத் 22-24, 7-21 என்ற நேர்செட்டில் பூசனன் ஓங்பாம்ருங்பனிடம் (தாய்லாந்து) வீழ்ந்தார்.
பெண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை 21-15, 24-22 என்ற நேர்செட்டில் சக நாட்டை சேர்ந்த தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி ஜோடியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது.