< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
தாய்லாந்து மாஸ்டா்ஸ் பேட்மிண்டன் : இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
|1 Feb 2024 6:47 AM IST
முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் - சீன தைபேவின் வாங் ஸு வெய் ஆகியோர் மோதினர்.
பாங்காங்,
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் - சீன தைபேவின் வாங் ஸு வெய்ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஸ்ரீகாந்த் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 22-20 , 21-19 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.