< Back
பிற விளையாட்டு
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அஷ்மிதா சாலிஹா அரையிறுதிக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அஷ்மிதா சாலிஹா அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
3 Feb 2024 12:49 AM IST

அசாமை சேர்ந்த அஷ்மிதா சாலிஹா, அரையிறுதியில் சுபனிதா கேத்தோங்கை (தாய்லாந்து) சந்திக்கிறார்.

பாங்காக்,

தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 19-21, 15-21 என்ற நேர் செட்டில் நெதர்லாந்து வீரர் மார்க் கால்ஜோவிடம் தோல்வியை தழுவினார்.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் அஷ்மிதா சாலிஹா (இந்தியா) 21-14, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் எஸ்டர் நுருமி டிரை வார்டோயோவை (இந்தோனேசியா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 57 நிமிடம் நடந்தது. இந்த தொடரில் களத்தில் நீடிக்கும் ஒரே இந்தியர் அஷ்மிதா சாலிஹா மட்டும் தான். அசாமை சேர்ந்த அவர் அரையிறுதியில் சுபனிதா கேத்தோங்கை (தாய்லாந்து) சந்திக்கிறார்.

பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை 12-21, 21-17, 21-23 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் பெப்ரியானா திவிபூஜி குஸ்மா- அமலியா சகயா பிரதிவி ஜோடியிடம் போராடி பணிந்தது.

மேலும் செய்திகள்