< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
டாடா ஸ்டீல் செஸ்; உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி
|18 Jan 2023 4:34 PM IST
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார்.
இதில் 4வது சுற்று போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான டிங் லிரனை எதிர்கொண்டார்.
லிரனுக்கு எதிரான 4வது சுற்றில் 73 நகர்த்தல்களின் முடிவில் உலகின் நம்பர் 2 வீரரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். 4வது சுற்று முடிவில் 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 4வது இடத்தில் உள்ளார்.
முதல் 3 சுற்றுகளில் பிரக்ஞானந்தா போட்டியை டிரா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.