< Back
பிற விளையாட்டு
வெற்றி கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ்- திரில் போட்டியில் பாட்னா அணியை வீழ்த்தி அசத்தல்

Image Tweeted By @ProKabaddi

பிற விளையாட்டு

வெற்றி கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ்- திரில் போட்டியில் பாட்னா அணியை வீழ்த்தி அசத்தல்

தினத்தந்தி
|
17 Oct 2022 8:50 PM IST

தமிழ் தலைவாஸ் அணி புரோ கபடி லீக் தொடரில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியைத் தமிழ் தலைவாஸ் அணி 'டை' ஆக்கியிருந்தது. அதை தொடர்ந்து அரியானாவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் மோசமாகத் தோற்றிருந்தது.

பின்னர் தமிழ் தலைவாஸ் அணி 32-39 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியிடம் வீழ்ந்தது. இதனால் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணி இன்று களமிறங்கியது. இதில் முதல் பாதியில் பின்தங்கி இருந்த தமிழ் தலைவாஸ் அணி 2-வது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணி வீரர் ஹிமான்ஷு சிறப்பாக ரெய்டு சென்று 11 புள்ளிகளை பெற்று கொடுத்தார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி இந்த தொடரில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்