< Back
பிற விளையாட்டு
தமிழ்நாடு கைப்பந்து லீக்: தொடக்க ஆட்டத்தில் கடலூர் அணி வெற்றி..!

Image Courtesy: insta - tamilnaduvolleyballleague

பிற விளையாட்டு

தமிழ்நாடு கைப்பந்து லீக்: தொடக்க ஆட்டத்தில் கடலூர் அணி வெற்றி..!

தினத்தந்தி
|
4 Jan 2024 5:33 AM IST

இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.

சென்னை,

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்.) சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்கினார்.

நடிகர் ஜீவா கலந்து கொண்டு இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையை அறிமுகப்படுத்தியதுடன், போட்டியையும் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டும்.

இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் உக்கிரபாண்டியன் தலைமையிலான சென்னை ராக்ஸ்டார்ஸ்- ஜெரோம் வினித் தலைமையிலான கடலூர் வித் அஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்த கடலூர் அணி 20-21, 21-18, 19-21, 21-20, 21-11 என்ற செட் கணக்கில் சென்னை ராக்ஸ்டார்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இதையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கிருஷ்ணகிரி புல்ஸ் அணி 21-18, 17-21, 21-14, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் விழுப்புரம் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.



மேலும் செய்திகள்