< Back
பிற விளையாட்டு
தமிழ்நாடு கைப்பந்து லீக்: சென்னை அணி 3-வது வெற்றி...!

Image Courtesy: Insta - tamilnaduvolleyballleague

பிற விளையாட்டு

தமிழ்நாடு கைப்பந்து லீக்: சென்னை அணி 3-வது வெற்றி...!

தினத்தந்தி
|
9 Jan 2024 8:16 AM IST

இன்றைய ஆட்டங்களில் விழுப்புரம் சூப்பர் கிங்ஸ்-விருதுநகர் கிங் மேக்கர்ஸ், கடலூர் வித் அஸ்-கிருஷ்ணகிரி புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 6 அணிகள் இடையிலான முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்.) சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்'பில் மோதி அதில் ஜெயிக்கும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டும்.

இந்த போட்டி தொடரில் 5-வது நாளான நேற்று மாலை நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் குமரி போனிக்ஸ்-விருதுநகர் கிங் மேக்கர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் விருதுநகர் கிங் மேக்கர்ஸ் 21-16, 21-14, 21-12, 19-21, 21-20 என்ற செட் கணக்கில் குமரி போனிக்சை தோற்கடித்தது.

இதையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ் அணி 21-15, 21-13, 21-16, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் விழுப்புரம் சூப்பர் கிங்சை பதம் பார்த்தது. 4-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது வெற்றியாகும். சென்னை கேப்டன் உக்கிரபாண்டியன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய ஆட்டங்களில் விழுப்புரம் சூப்பர் கிங்ஸ்-விருதுநகர் கிங் மேக்கர்ஸ் (மாலை 5.30 மணி), கடலூர் வித் அஸ்-கிருஷ்ணகிரி புல்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்