தேசிய தடகள போட்டிக்கான தமிழக அணி அறிவிப்பு
|தேசிய தடகள போட்டிக்கான தமிழக அணியில் 65 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை,
மாநிலங்களுக்கு இடையிலான 63-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி அரியானாவில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள அணியை, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார்.
தமிழக ஆண்கள் அணியில் சாய் சித்தார்த், அருண் குமார், ராகுல் குமார், நிதின், விஷால், ஆரோக்ய ராஜீவ், சந்தோஷ், ஆகாஷ் பாபு, வாசன், சரண் சங்கர், ஜெபக்குமார், தனுஷ் ஆதித்தன், மகேந்திரன், அரவிந்த், சுவாமிநாதன், பாரதி, முகமது சலாலுதீன், பிரவீன் சித்ரவேல், கவுதம், ஸ்ரீகுமரன் உள்பட 35 வீரர்களும், பெண்கள் அணியில் கிரிதரணி, பவித்ரா, நாதலியா இவாஞ்சலின், சுபா, வித்யா, புனிதா, கவிதா, லாவண்யா, இளவரசி, நித்யா, நந்தினி, ஷெரின், ஐஸ்வர்யா, பரனிகா, பவித்ரா, கிரிஷ்ணா ஜெயசங்கர், ஹேமமாலினி, தீபிகா, ஒலிம்பா ஸ்டெபி, ரோசி, கவுசல்யா உள்பட 30 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.