< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக, ஆசிய ஜூனியர் போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீரர், வீராங்கனைகள்
|21 Feb 2023 3:30 AM IST
இந்திய அணி தேர்வு போட்டி இந்திய வாள்வீச்சு சம்மேளனம் சார்பில் டெல்லியில் நடத்தப்பட்டது.
சென்னை,
ஆசிய ஜூனியர் மற்றும் கேடட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்டில் மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், உலக ஜூனியர் மற்றும் கேடட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவில் உள்ள புளோடிவ்வில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும் நடக்கிறது.
இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு போட்டி இந்திய வாள்வீச்சு சம்மேளனம் சார்பில் டெல்லியில் நடத்தப்பட்டது. இதன் முடிவில் இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய வாள்வீச்சு அணிக்கு தமிழகத்தை சேர்ந்த வீரர் வி.சந்தோஷ் (கேடட், எபீ பிரிவு), வீராங்கனைகள் என்.வி.ஜெனிஷா (கேடட், பாயில்), எஸ்.ஜாய்ஸ் அஷிதா (ஜீனியர் பாயில்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.