< Back
பிற விளையாட்டு
சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில்  தமிழ்நாடு ஆண்கள் அணி சாம்பியன்!

கோப்புப்படம்

பிற விளையாட்டு

சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு ஆண்கள் அணி சாம்பியன்!

தினத்தந்தி
|
11 Dec 2023 12:46 PM IST

பெண்கள் பிரிவில் கேரள அணியை வீழ்த்தி இந்தியன் ரெயில்வே சாம்பியன் பட்டம் வென்றது.

லூதியானா,

73வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் இந்தியன் ரெயில்வே அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு 72-67 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பெண்கள் பிரிவில் கேரள அணியை வீழ்த்தி இந்தியன் ரெயில்வே சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும் செய்திகள்