< Back
பிற விளையாட்டு
உலக, ஆசிய போட்டிகளுக்கு தமிழக வாள்வீச்சு வீராங்கனைகள் பவானி தேவி, ஜெனிஷா தேர்வு
பிற விளையாட்டு

உலக, ஆசிய போட்டிகளுக்கு தமிழக வாள்வீச்சு வீராங்கனைகள் பவானி தேவி, ஜெனிஷா தேர்வு

தினத்தந்தி
|
11 Jun 2023 2:17 AM IST

உலக, ஆசிய போட்டிகளுக்கு தமிழக வாள்வீச்சு வீராங்கனைகள் பவானி தேவி, ஜெனிஷா தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் வருகிற 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும், உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் ஜூலை 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும் நடக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகளுக்கான இந்திய வாள்வீச்சு அணி தேர்வு டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனைகள் சி.ஏ.பவானி தேவி (சாப்ரே பிரிவு), என்.வி.ஜெனிஷா (பாயில் பிரிவு) ஆகியோர் இந்திய வாள்வீச்சு அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்க இடைக்கால கமிட்டி தலைவர் சுப்பையா தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்