< Back
பிற விளையாட்டு
தைபே ஓபன் பேட்மிண்டன்: பிரனாய் கால்இறுதிக்கு தகுதி

HS Prannoy (image courtesy: BAI Media via ANI)

பிற விளையாட்டு

தைபே ஓபன் பேட்மிண்டன்: பிரனாய் கால்இறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
23 Jun 2023 5:05 AM IST

தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது.

தைபே,

தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-9, 21-17 என்ற நேர்செட்டில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவரான டாமி சுஜியர்டோவை (இந்தோனேசியா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் பிரனாய், ஹாங்காங்கின் அங்குஸ் நாக் கா லாங்கை எதிர்கொள்கிறார்

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் காஷ்யப் 16-21, 17-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சு லி யாங்கிடம் வீழ்ந்தார்.

பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை தான்யா காமத் 11-21, 6-21 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான தாய் சூ யிங்கிடம் (சீன தைபே) தோற்று வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோஹன் கபூர் ஜோடி 13-21, 18-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சி ஹியாங் சிக்-லின் ஜியாவ் மின் இணையிடம் பணிந்தது.

மேலும் செய்திகள்