< Back
பிற விளையாட்டு
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: காலிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய ஆடவர் அணி

Image Courtesy: AFP 

பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: காலிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய ஆடவர் அணி

தினத்தந்தி
|
6 Oct 2022 9:44 PM IST

சீன அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

செங்குடு,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் செங்குடுவில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் சத்யன் ஞானசேகரன் தலைமையிலான இந்திய ஆடவர் அணி பங்கேற்றுள்ளது. இந்திய அணியின் அனுபவ வீரர் சரத் கமல் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் சத்யன், மானவ் தாக்கர், ஹர்மித் தேசாய் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி களமிறங்கியுள்ளது.

குரூப் சுற்றில் 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய அணி இன்று பலம் வாய்ந்த சீன அணியை எதிர்கொண்டது.

இந்தச் சுற்றில் 3-0 என்ற கணக்கில் சீன அணி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஹர்மீத் தேசாய், ஜி.சத்யன் மற்றும் மனுஷ் ஷா என மூவரும் அடுத்தடுத்து தங்களது ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினர்.இதன் மூலம் இந்திய ஆடவர் அணி உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் கடந்த 2004 முதல் சீன அணி சாம்பியன் பட்டம் வென்று வருகிறது. அந்த ஆதிக்கத்தை நடப்பு தொடரிலும் அந்த அணி தொடர செய்துள்ளது.

மேலும் செய்திகள்