< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக டேபிள் டென்னிஸ்: சத்யன் கால்இறுதியில் தோல்வி
|19 Jun 2022 1:42 AM IST
உலக டேபிள் டென்னிஸ் ‘கன்டெண்டர்’ போட்டியில் சத்யன் கால்இறுதியில் தோல்வியடைந்தார்.
உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரப்பில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஜி.சத்யன் 11-9, 11-7, 12-10 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் யுவான்யுவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். நேற்று நடந்த கால்இறுதியில் சத்யன், 18-ம் நிலை வீரரான சீன தைபேயின் சுவாங் சி யானை எதிர்கொண்டார். இதில் சத்யன் 7-11, 9-11, 5-11 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு நடையை கட்டினார்.