< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன்: 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் தோல்வி
|23 March 2023 10:18 PM IST
சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது.
பாசெல்,
சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி 22-20, 21-17 என்ற நேர் செட்டில் லீ செயுகியுவிடம் (ஹாங்காங்) அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ் பிரனாய், 21-8, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ போபோவிடம் தோற்று வெளியேறினார்.