< Back
பிற விளையாட்டு
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த் போராடி தோல்வி
பிற விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த் போராடி தோல்வி

தினத்தந்தி
|
24 March 2024 8:51 AM IST

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.

பாசெல்,

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் தைவான் வீரரான சி.ஒய். லின் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் முதல் செட்டை ஸ்ரீகாந்த கைப்பற்றிய நிலையில் அடுத்த இரு செட்டுகளை சி.ஒய். லின் கைப்பற்றி வெற்றி பெற்றார். முடிவில் 21 -15, 9-21 மற்றும் 18-21 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் போராடி தோல்வியடைந்தார்.

மேலும் செய்திகள்