< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி
|23 March 2024 8:54 AM IST
ஸ்ரீகாந்த் அரையிறுதியில் சி.ஒய். லின் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
பாசெல்,
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா வீரரான ஸ்ரீகாந்த் தைவானின் சி.லீ உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21 -10 மற்றும் 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் அரையிறுதியில் மற்றொரு தைவான் வீரரான சி.ஒய். லின் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.