< Back
பிற விளையாட்டு
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy: PTI

பிற விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
22 March 2024 3:47 PM IST

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.

பாசெல்,

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மலேசியாவின் லீ ஜி ஜியா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் லீ ஜி ஜியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் தைவானின் சி.லீக்கு எதிராக 17-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்றொரு இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் பிரான்சின் அலெக்ஸ் லேனியருக்கு எதிரான ஆட்டத்தில் 18-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்ரீகாந்த் தைவானின் சி.லீக்கு எதிராகவும், கிரண் ஜார்ஜ் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவுக்கு எதிராகவும், மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷு ரஜாவத் தைவானின் சவு டியென் ஷென்னுக்கு எதிராகவும் ஆட உள்ளனர்.

மேலும் செய்திகள்