< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்: சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'
|27 March 2023 1:36 AM IST
இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி கோப்பையை கைப்பற்றியது.
பாசெல்,
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் பாசெல் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 24-22 என்ற நேர் செட்டில் சீனாவின் ரென் ஸியாங் யு- டான் கியாங் இணையை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த ஆட்டம் 54 நிமிடங்கள் நீடித்தது. கடந்த வாரம் ஆல்இங்கிலாந்து பேட்மிண்டனில் 2-வது சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்திற்கு உள்ளான இந்திய ஜோடிக்கு இந்த சீசனில் கிடைத்த முதல் பட்டம் உற்சாகத்தை தந்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இவர்களுக்கு ஒட்டுமொத்தத்தில் இது 5-வது சர்வதேச பட்டமாகும்.
சுவிஸ் ஓபனில் பெண்கள் ஒற்றையரில் போர்பவீ சோச்சுவோங்கும் (தாய்லாந்து), ஆண்கள் ஒற்றையரில் கோகி வடானாபேவும் (ஜப்பான்) பட்டத்தை தட்டிச் சென்றனர்.