< Back
பிற விளையாட்டு
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; கரோலினா மரின் சாம்பியன்

Image Courtesy: AFP

பிற விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; கரோலினா மரின் சாம்பியன்

தினத்தந்தி
|
25 March 2024 5:28 PM IST

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.

பாசெல்,

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரின் இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரிஸ்கா துஞ்சங்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய கரோலினா மரின் அடுத்த செட்டை 13-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் கரோலினா மரின் 22-20 என்ற புள்ளிக்கணக்கில் கிரிகோரியா மரிஸ்கா துஞ்சங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மேலும் செய்திகள்