< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் சுமித்
|8 Nov 2022 12:33 AM IST
கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித், தாய்லாந்தின் போர்வோர்னை எதிர்கொண்டார்.
ஜோர்டான்,
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் 75 கிலோ எடைப்பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித், தாய்லாந்தின் போர்வோர்ன் கடம்துவானை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் சுமித் 3-2 என்ற கணக்கில் போர்வோர்னை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியதோடு பதக்கத்தையும் உறுதி செய்தார். அவர் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஜாபரோவ் சைட்ஜாம்ஷித்தை எதிர்கொள்கிறார்.