< Back
பிற விளையாட்டு
மாநில கைப்பந்து போட்டி: 2-வது இடம் பிடித்த போலீஸ்துறை அணிக்கு டி.ஜி.பி. பாராட்டு
பிற விளையாட்டு

மாநில கைப்பந்து போட்டி: 2-வது இடம் பிடித்த போலீஸ்துறை அணிக்கு டி.ஜி.பி. பாராட்டு

தினத்தந்தி
|
18 Sept 2022 10:43 AM IST

மாநில கைப்பந்து போட்டியில் முதன் முறையாக தமிழக போலீஸ் துறையின் கைப்பந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.

சென்னை:

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 70 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக தமிழக போலீஸ் துறையின் கைப்பந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தை பெற்று சாதனை படைத்தது.

வரலாற்று சாதனையை பதிவு செய்த அணி வீரர்கள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார். அப்போது குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி. அபாஷ்குமார் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்