< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மாநில கைப்பந்து: இந்தியன் வங்கி அரைஇறுதிக்கு தகுதி
|15 Sept 2022 3:55 AM IST
கால்இறுதியில் இந்தியன் வங்கி அணி சுங்க இலாகா அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
சென்னை,
70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-21, 25-17, 21-25, 29-27 என்ற செட் கணக்கில் ஜமால் கல்லூரியை (திருச்சி) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு கால்இறுதியில் இந்தியன் வங்கி 20-25, 25-22, 25-22, 25-19 என்ற செட் கணக்கில் சுங்க இலாகாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் பி.கே.ஆர். (கோபி) 25-10, 25-6, 25-13 என்ற நேர்செட்டில் பனிமலரை எளிதில் தோற்கடித்து அரைஇறுதியை எட்டியது. இன்னொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 25-14, 25-13, 25-17 என்ற நேர்செட்டில் தமிழ்நாடு போலீசை சாய்த்தது.