< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி விளையாட்டு போட்டி; நெல்லையை வீழ்த்தியது கோவை
|2 July 2023 1:49 AM IST
சென்னையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி விளையாட்டு போட்டியில் நெல்லையை கோவை வீழ்த்தியுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 15 வகையான போட்டிகள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கபடி போட்டியில் நெல்லை மாவட்ட அணி வீரரை, கோவை மாவட்ட அணியினர் மடக்கி பிடித்த காட்சி. இந்த ஆட்டத்தில் கோவை அணி 32-25 என்ற புள்ளி கணக்கில் நெல்லையை வீழ்த்தியது.