< Back
பிற விளையாட்டு
மாநில கூடைப்பந்து போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி
பிற விளையாட்டு

மாநில கூடைப்பந்து போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
9 Jun 2023 5:23 AM IST

தமிழ்நாடு போலீஸ் அணி 55-51 என்ற புள்ளி கணக்கில் யுனிகார்னை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

சென்னை,

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 19-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி 83-71 என்ற புள்ளி கணக்கில் லயோலா அணியை வீழ்த்தியது.

பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 55-51 என்ற புள்ளி கணக்கில் யுனிகார்னை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால்இறுதியில் ரைசிங் ஸ்டார் அணி 90-38 என்ற புள்ளி கணக்கில் பெரம்பூர் ஹன்டர்சை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

மேலும் செய்திகள்