< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி
|29 March 2024 1:07 PM IST
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப்-32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பானின் கூ தகாஹாஷி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகாந்த் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 18-21, 15-21 என்ற செட் கணக்கில் கூ டகாஹஷியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.