< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சிக்கி ரெட்டி ஜோடி தோல்வி
|31 March 2024 2:31 AM IST
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சிக்கி ரெட்டி- சுமீத் ரெட்டி இணை 17-21 மற்றும் 12-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஹனிங்டியாஸ் மெண்டரி- ரினோவ் ரிவால்டி இணையிடம் வீழ்ந்தது. இந்த ஆட்டம் 29 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இத்துடன் இந்த தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.