< Back
பிற விளையாட்டு
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து போராடி தோல்வி

image courtesy: AFP

பிற விளையாட்டு

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து போராடி தோல்வி

தினத்தந்தி
|
30 March 2024 1:11 AM IST

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.

மாட்ரிட்,

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து 26-24, 17-21, 20-22 என்று செட் கணக்கில் தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்கிடம் போராடி தோல்வி அடைந்தார்.

இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ- அஸ்வினி பொன்னப்பா இணை 13-21, 19-21 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் லீ சியா ஹசின்- தெங் சுன் சன் ஜோடியிடம் சரண் அடைந்தது.

மேலும் செய்திகள்