< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி
|2 April 2023 1:54 AM IST
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை சந்தித்தார்.
48 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிந்து 24-22, 22-20 என்ற நேர்செட்டில் யோ ஜியா மின்னை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிந்து அதன் பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.