< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; தகுதி சுற்றில் மிதுன் மஞ்சுநாத் வெற்றி
|26 March 2024 6:08 PM IST
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஸ்பெயினில் நடைப்பெற்று வருகிறது.
ஸ்பெயின்,
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஸ்பெயினில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் சக நாட்டு வீரரான சங்கர் சுப்ரமணியனை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 15-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த மிதுன் மஞ்சுநாத் அடுத்த இரு செட்களை 24-22, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி தகுதிச்சுற்றின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.