< Back
பிற விளையாட்டு
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு தகுதி
பிற விளையாட்டு

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
29 March 2024 12:55 AM IST

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.

மாட்ரிட்,

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட்டில் சீனத் தைபேயின் ஹூவாங் யூ சன்னை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த ஆட்டம் 36 நிமிடம் நடந்தது. சிந்து அடுத்து தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்குடன் மோத உள்ளார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்- துருவ் கபிலா ஜோடி 21-17, 21-19 என்ற நேர் செட்டில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி- மேத்யூ கிரிம்லி இணையை வீழ்த்தி காலிறுதியை எட்டியது.

மேலும் செய்திகள்