< Back
பிற விளையாட்டு
தென்மண்டல செஸ்: எஸ்.ஆர்.எம். சாம்பியன்

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

தென்மண்டல செஸ்: எஸ்.ஆர்.எம். 'சாம்பியன்'

தினத்தந்தி
|
14 March 2023 1:49 AM IST

2-வது இடத்தை எம்.ஜி.பல்கலைக்கழகமும் (கேரளா) 3-வது இடத்தை சென்னை பல்கலைக்கழகமும் பிடித்தன.

சென்னை,

தென்மண்டல பல்கலைக்கழக செஸ் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.

7 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஹரி கிருஷ்ணன், அஜய் கார்த்திகேயன், கார்த்திக் வெங்கட்ராமன், அர்ஜூன் கல்யாண், ஹர்ஷவர்தன், ஸ்ரீஹரி ஆகியோர் அடங்கிய எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

2-வது இடத்தை எம்.ஜி.பல்கலைக்கழகமும் (கேரளா) 3-வது இடத்தை சென்னை பல்கலைக்கழகமும் பிடித்தன.

மேலும் செய்திகள்