< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
தென் மண்டல டேபிள் டென்னிஸ்: எஸ்.ஆர்.எம். அணி தங்கப்பதக்கம் வென்றது
|18 Nov 2022 2:37 AM IST
தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி தங்கப்பதக்கம் வென்றது.
சென்னை,
தென்மண்டல பல்கலைக்கழக டேபிள் டென்னிஸ் போட்டி பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னை பல்கலைக்கழகத்தை சாய்த்து தங்கப்பதக்கத்தை வென்றது.
இதன் மூலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிக்கு தகுதி பெற்றது.