< Back
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி கால்இறுதிக்கு தகுதி

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி கால்இறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
31 May 2024 4:02 AM IST

திரிஷா ஜாலி - காயத்ரி கூட்டணி, தென்கொரிய ஜோடியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை, உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஆல் இங்கிலாந்து சாம்பியனான பாக் ஹா நா- லீ சோ ஹி (தென் கொரியா) இணையுடன் மோதியது.

இந்த போட்டியில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, 21-9, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் பாக் ஹா நா- லீ சோ ஹி ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 59 நிமிடங்கள் நடந்தது. தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் திரிஷா ஜாலி - காயத்ரி கூட்டணி, தென்கொரிய இணைக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மேலும் செய்திகள்