< Back
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி
பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி

தினத்தந்தி
|
9 Jun 2023 4:40 AM IST

இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சீனதைபே வீரர் சியா ஹாவ் லீயிடம் வீழ்ந்தார்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 15-21, 19-21 என்ற நேர் செட்டில் சியா ஹாவ் லீயிடம் (சீனதைபே) வீழ்ந்தார். மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜவாத் 17-21, 16-21 என்ற நேர் செட்டில் கோடாய் நராவ்காவிடம் (ஜப்பான்) பணிந்தார்.

இரட்டையர் பிரிவில் அர்ஜூன்- துருவ் கபிலா ஜோடி 15-21, 19-21 என்ற கணக்கில் இங்கிலாந்தின் பென் லேன்- சியான் வென்டி இணையிடம் 41 நிமிடங்களில் தோற்று வெளியேறியது. இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. சிங்கப்பூர் ஓபனில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் உள்பட மொத்தம் 13 இந்தியர்கள் களம் கண்டனர். ஆனால் ஒருவர் கூட 2-வது சுற்றை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்