< Back
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு தகுதி
பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு தகுதி

தினத்தந்தி
|
14 July 2022 4:45 AM IST

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த்,காஷ்யப் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-11 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் லியானி டானை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-18, 21-14 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 66-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-16, 21-11 என்ற நேர்செட்டில் 12-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானுக்கு அதிர்ச்சி அளித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 21-16 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 77-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 21-17, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான சக நாட்டு வீரர் ஸ்ரீகாந்தை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. ஸ்ரீகாந்தை போல் மற்ற இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் வர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

மேலும் செய்திகள்