< Back
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி

image courtesy;AFP

பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
29 May 2024 6:55 AM IST

2-வது நாளான இன்று இந்திய தரப்பில் பி.வி.சிந்து, பிரனாய், லக்‌ஷயா சென், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் 'நம்பர் ஒன்' இணையான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி உலக தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் டேனியல் லண்ட்கார்ட்- மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட சாத்விக்-சிராக் ஜோடி 20-22, 18-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

ஒற்றையர் பிரிவில் பிரியன் ஷூ ரஜாவத், ஆகர்ஷி காஷ்யப், பெண்கள் இரட்டையரில் ருதுபர்ணா பாண்டா- சுவேதாபர்ணா பாண்டா, கலப்பு பிரிவில் ஆஷித் சூர்யா- அம்ருதா பிரமுதேஷ் ஜோடி ஆகிய இந்தியர்களும் தோல்வி கண்டு வெளியேறினர். 2-வது நாளான இன்று இந்திய தரப்பில் பி.வி.சிந்து, பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.

மேலும் செய்திகள்