< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : பிவி சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|29 May 2024 7:51 PM IST
முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்டார்.
சிங்கப்பூர்,
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 21-12, 22-20 என நேர் செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை லின் ஜோஜ்மார்க்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் பிவி சிந்துவுக்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரினை எதிர்கொள்கிறார்