< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
|14 July 2022 9:36 AM IST
இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து -வியட்நாம்வீராங்கனை துய் லின் குயேன் ஆகியோர் மோதினர்.
சிங்கப்பூர் ,
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து -வியட்நாம் வியட்நாம் வீராங்கனை துய் லின் குயேன் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் லின் குயேன் கைப்பற்றினார்.பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் .இதனால் 19-21, 21-19, 21-18. என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.