< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் - 2வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி
|30 May 2024 6:06 PM IST
இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை எதிர்கொண்டார்.
சிங்கப்பூர்,
முன்னணி வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 13-21, 21-14,15-21 என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ். பிரனாய் தோல்வியடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்