< Back
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Image : PTI 

பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
31 May 2024 2:30 PM IST

இந்திய ஜோடி, உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் தென் கொரிய ஜோடியுடன் மோதியது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் கிம் சோ யோங்-காங் யீ யாங் ஜோடியுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 18-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 21-19, 24-22 என போராடி வென்று தென் கொரிய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்