< Back
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - சிந்து, பிரனாய் பங்கேற்பு

image courtesy: AFP

பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - சிந்து, பிரனாய் பங்கேற்பு

தினத்தந்தி
|
28 May 2024 6:30 AM IST

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது.

சிங்கப்பூர்,

மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது.

ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும் வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் எச்.எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத், இரட்டையர் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்தியர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.

கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்த சிந்து அதற்கு பரிகாரம் தேடும் வகையில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார். இதே போல் இந்திய இளம் புயல் லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.

மேலும் செய்திகள்