< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: பிரதாப் சிங் தோமருக்கு தங்கம்
|23 Feb 2023 3:17 AM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
கெய்ரோ,
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 16-6 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஸ்கிமியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
இந்த போட்டியில் இந்தியா வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். மத்தியபிரதேசத்தை சேர்ந்த 22 வயதான ஐஸ்வரி பிரதாப் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.