< Back
பிற விளையாட்டு
சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மணிகா பத்ரா தோல்வி

image courtesy: X (Twitter) / File Image

பிற விளையாட்டு

சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மணிகா பத்ரா தோல்வி

தினத்தந்தி
|
10 May 2024 1:58 PM IST

சவுதி ஸ்மாஷ டேபிள் டென்னிஸ் போட்டி ஜெட்டா நகரில் நடந்து வருகிறது.

ஜெட்டா,

சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் போட்டி ஜெட்டா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா காலிறுதிக்கு முன்னேறி இருந்தார்.

இதன் மூலம் எலைட் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் கால் இறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

காலிறுதியில் மணிகா பத்ரா, 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹினா ஹயாட் டாவுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 11-7 6-11 4-11 11-13 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

மேலும் செய்திகள்