பிரபல மல்யுத்த வீராங்கனை இளம் வயதில் மரணம்
|முன்னாள் டபிள்யூடபிள்யூஇ மல்யுத்த வீராங்கனையான சாரா லீ மரணமடைந்தார்.
வாஷிங்டன்
முன்னாள் டபிள்யூடபிள்யூஇ மல்யுத்த வீராங்கனையான சாரா லீ (30) இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இதனை லீயின் தாயார் டெர்ரி தனதுபேஸ்புக் பக்கத்தில்அறிவித்தார், ஆனால் மரணத்திற்கான காரணம் குறித்த எந்த விவரங்களையும் அவர் வெளியிடவில்லை.
"எங்கள் சாரா வெஸ்டன் கடவுளுடன் கலந்துவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்பினோம்.எங்கள் குடும்பம் "அதிர்ச்சியில்" இருப்பதாக கூறி உள்ளார்.
மேலும் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம், ஏற்பாடுகள் முழுமையடையவில்லை. மரியாதையுடன் எங்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெர்விக்க கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
ஆகஸ்ட் 2015 இல் டபிள்யூடபிள்யூஇ இன் ரியாலிட்டி ஷோ போட்டியான "டப் எனப்" ஆறாவது சீசனை லீ வென்று இருந்தார்.
ஒரு நாள் முன்பு, லீ தனது இன்ஸ்டாகிராமில் ஜிம் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "இறுதியாக 2 நாட்கள் ஜிம்மிற்குச் செல்லும் அளவுக்கு ஆரோக்கியமாக இருப்பதைக் கொண்டாடுகிறேன் என கூறி இருந்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, புளோரிடாவின் ஆர்லாண்டோவில் லீ தனது மல்யுத்தப் பயிற்சியைத் மேற்கொண்டுவந்தார்.